பிக்பாஸ் வருணை கட்டிப்பிடித்த மகிழ்ச்சியடைந்த சிறுமிகள்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒரு சில நாட்களிலேயே பிரபலம் அடைந்து விடுவார்கள் என்பதும் அதன் பின்னர் அவர்களுக்கு திரைஉலக வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரின் உறவினராக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருணுக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது என்பதும், அவர் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறவில்லை என்றாலும் மக்களின் மனங்களை வென்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய புத்தாண்டில் கோவிலுக்கு சென்று சாமி கூட வருண் சென்றபோது கோவிலில் இருந்த பொதுமக்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறினார்கள். குறிப்பாக கோவிலுக்கு வந்த சிறுமிகள் வருணை கட்டிப்பிடித்து புத்தாண்டு வாழ்த்து கூறியதும், அதற்கு வருண் அவர்களுக்கு நன்றி தெரிவித்த காட்சிகளின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களின் மனதைக் கவர்ந்த வருண் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனங்களையும் கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

காஜல் அகர்வால் கர்ப்பம் உண்மையா? கணவர் கவுதம் கிட்சலு இன்ஸ்டாகிராம் பதிவு!

பிரபல நடிகை காஜல் அகர்வால் மற்றும் மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்சலு ஆகிய இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்பதும் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றது உள்பட

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் இந்த இருவரா? 

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்களின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ரசிகர்களுக்கு சிம்புவின் புத்தாண்டு வாழ்த்து அறிக்கை

மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆம் ஆண்டை முடிக்கிறேன் என்றும் 2022 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் அமைய வேண்டி கொள்கிறேன் என்றும் நடிகர் சிம்பு புத்தாண்டு வாழ்த்து அறிக்கை

போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அறிவுரையை கண்டிப்புடன் கூறிய கமல்!

போட்டியாளர்கள் அனைவருக்கும் கண்டிப்புடன் கமல்ஹாசன் கூறிய அறிவுரை சற்றுமுன் புரமோ வீடியோவில் வெளியாகி உள்ளது

விலகியது 'ஆர்.ஆர்.ஆர்', 'வலிமை'யுடன் பொங்கல் ரேஸில் இணைந்த பிரபல நடிகரின் படம்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில்