டேஞ்சர் ஜோனில் இருந்து தப்பித்துவிட்டாரா அபிஷேக்: அப்ப இந்த வாரம் எலிமினேஷன் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சஞ்சீவ், அமீர் மற்றும் நிரூப் ஆகிய மூவரை தவிர மீதமுள்ள 10 பேர்கள் நாமினேசன் செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களில் அபிஷேக் மிக குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறும் பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி அபிஷேக், வருண் மற்றும் அபினய் ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்களில் அபிஷேக் மற்ற இருவரை விட கொஞ்சம் அதிகமான வாக்குகள் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே டேஞ்சர் ஜோனில் இருந்து அபிஷேக் கிட்டதட்ட தப்பி விட்டதாகவும் இந்த வாரம் வருண் அல்லது அபினய் ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேஷன் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்களுக்கு வாக்களிக்க நாளை ஒரு நாள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் அபிஷேக் மீண்டும் கீழே இறங்கி வருவாரா? அல்லது அபினய், வருண் ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேஷன் ஆவார்கள? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய இருவருக்கும் இடையே இந்த வாரம் கடுமையான சண்டை ஏற்பட்டாலும் இருவருமே அதிக வாக்குகள் பெற்று இந்த வாரம் எலிமினேஷன் இருந்து தப்பித்து விட்டதாகவும் அதிகாரபூர்வமற்ற வாக்குகள் எண்ணிக்கை கூறுகிறது.

More News

'நான் பார்த்த முதல் முகம் நீ': ஜான்வி கபூரின் நெகிழ்ச்சியான பதிவுக்கு குவியும் லைக்ஸ்!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை' என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது

மாறி மாறி இதயங்களை பரிமாறி கொண்ட சிம்பு-கீர்த்தி சுரேஷ்: நெட்டிசன்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி

நாம எவ்வளவு முக்கியம்ன்னு காட்டனும்டா: ஜிவி பிரகாஷின் 'செல்பி' டிரைலர்

ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடிப்பில் உருவான 'செல்பி' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சீயான் விக்ரமுடன் இணைந்த பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சியான் விக்ரமின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் பார்த்த முதல் முகம் நீ… ஸ்ரீதேவி மகள் செய்த நெகிழ்ச்சி காரியம்!

போனிகபூர் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் “வலிமை“ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.