close
Choose your channels

டேஞ்சர் ஜோனில் இருந்து தப்பித்துவிட்டாரா அபிஷேக்: அப்ப இந்த வாரம் எலிமினேஷன் யார்?

Thursday, December 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சஞ்சீவ், அமீர் மற்றும் நிரூப் ஆகிய மூவரை தவிர மீதமுள்ள 10 பேர்கள் நாமினேசன் செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களில் அபிஷேக் மிக குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறும் பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி அபிஷேக், வருண் மற்றும் அபினய் ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்களில் அபிஷேக் மற்ற இருவரை விட கொஞ்சம் அதிகமான வாக்குகள் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே டேஞ்சர் ஜோனில் இருந்து அபிஷேக் கிட்டதட்ட தப்பி விட்டதாகவும் இந்த வாரம் வருண் அல்லது அபினய் ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேஷன் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்களுக்கு வாக்களிக்க நாளை ஒரு நாள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் அபிஷேக் மீண்டும் கீழே இறங்கி வருவாரா? அல்லது அபினய், வருண் ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேஷன் ஆவார்கள? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய இருவருக்கும் இடையே இந்த வாரம் கடுமையான சண்டை ஏற்பட்டாலும் இருவருமே அதிக வாக்குகள் பெற்று இந்த வாரம் எலிமினேஷன் இருந்து தப்பித்து விட்டதாகவும் அதிகாரபூர்வமற்ற வாக்குகள் எண்ணிக்கை கூறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.