close
Choose your channels

ஆபத்தான நிலையில் நால்வர்: இந்த வாரம் வெளியேறும் பிக்பாஸ் போட்டியாளர் இவரா?

Friday, November 26, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் மொத்தம் 6 பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டார்கள் என்பதும் அவர்கள் பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி மற்றும் ஐக்கி பெர்ரி என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த 6 பேர்களில் நான்கு பேர்களுக்கு குறைவான வாக்குகள் பெறு வெளியேறும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நிரூப், ஐக்கி பெர்ரி, பாவனி மற்றும் தாமரை ஆகிய நால்வருமே 15 முதல் 16 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர் என்பதும் நால்வருக்கும் இடையிலான வித்தியாசம் நூற்றுக்கணக்கில் மட்டுமே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே இந்த நால்வரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறலாம் என்றும் குறிப்பாக பாவனி மற்றும் தாமரை ஆகிய இருவரும் மிக குறைவான வாக்குகள் பெற்று இருப்பதால் இவர்களின் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை அடுத்தடுத்து வரும் செய்திகளில் இருந்து பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz