மீண்டும் ஃபார்முக்கு வந்த அசீம். இருக்கு.. இன்னிக்கு சம்பவம் இருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் 3 புரோமோ வீடியோக்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் இருக்கும் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்று முன் வெளியான வீடியோவில் அசீம் மற்றும் விக்ரமன் காரசாரமாக மோதும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவில் ராஜகுருவாக இருக்கும் விக்ரமனை பார்த்து படைத்தளபதியான அசீம், ‘உங்கள் சாப்பாட்டில் காரித்துப்பி கொடுத்தால் நீங்கள் சாப்பிடுவீர்களா? எனக்கேட்க இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த விக்ரமன், ‘ஏய் இப்படியெல்லாம் பேசாதிங்க என்று கூறுகிறார்.

உடனே விக்ரமனை நோக்கி ஆவேசமாக பாயும் அசீம், ‘யாருடா நீ என்ன பார்த்தே ஏய் என்று பேசுகிறாய் என ஒருமையில் பேச மற்ற போட்டியாளர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்து அசீம் ஆவேசமாக விளையாடி வரும் நிலையில் இடையில் சில நாட்களாக கமல்ஹாசனின் கண்டிப்பு காரணமாக அமைதியாக மாறினார். இந்த நிலையில் தற்போது அசீம் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சி.எம் அனுமதி கொடுத்த டைட்டில் தான் 'கலகத்தலைவன்': மகிழ்திருமேனி

 உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கலகத்தலைவன்' என்ற திரைப்படம் வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அஜித்துக்கு இந்த மாதிரி ஸ்டெப்ஸ் தான் கொடுத்திருக்கின்றேன்: 'துணிவு' குறித்து கல்யாண் மாஸ்டர்

அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள்.. ப்ரியா மரணம் குறித்து பிரபல இசையமைப்பாளர்!

இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துக்களை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் மரணம் குறித்து பிரபல இசையமைப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

'தளபதி 67' வியாபாரமும் தொடங்கிவிட்டதா? சுவாரஸ்யமான தகவல்!

தளபதி விஜய் நடித்த 66வது  திரைப்படமான 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பே தற்போது தான் முடிவடைந்து பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரக்சிதாவுக்கு அம்புவிட கற்று கொடுக்கும் ராபர்ட். வேற லெவல் கெட்டப்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் சக போட்டியாளர் ரக்சிதாவுக்கு அம்பு விட கற்றுக்கொடுக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.