close
Choose your channels

பிக்பாஸ் தமிழ்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா?

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இரண்டாவது வாரத்தில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களுக்கு ரசிகர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த வாரம் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் சிக்கி உள்ளனர் என்பதும் அதில் ஐந்து போட்டியாளர்களுக்கு தற்போது அதிக அளவில் வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர்கள் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி மற்றும் இசைவாணி ஆகிய ஐவருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், எனவே இவர்கள் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய நால்வருக்கும் குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், குறிப்பாக அபிஷேக் தான் கடைசி இடத்தில் இருப்பதாகவும் அவருக்கு வெறும் சுமார் 10 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே கிடைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் முதல் இடத்தில் இருக்கும் பிரியங்காவுக்கு 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே குறைந்த வாக்குகள் பெற்ற அபிஷேக் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் அபிஷேக் கண்டெண்ட் கொடுக்கும் நபர் என்பதால் பிக்பாஸ் குழுவினர் அவரை வெளியேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.