தாமரை கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பிரியங்கா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் தாமரை கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பிரியங்கா ’நல்லா பேசுறாங்க மேம்’ என்றும் ரம்யா கிருஷ்ணனிடம் பிரியங்கா கூறும் காட்சிகள் உள்ளன.

கேப்டன்சி டாஸ்க்கில் என்ன பிரச்சனை? என்று ரம்யா கிருஷ்ணன் கேட்க அதற்கு எனக்கு கேப்டனாக தகுதி இல்லை என்று பிரியங்கா சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று தாமரை கூறுகிறார். மேலும் இந்த வீட்டில் கூட்டுவது, பெருக்குவது, சாப்பிடுவது தவற இன்னும் ஒன்னும் இருக்கு என்று பிரியங்கா கூறினார், அது என்ன என்பதை சொல்ல சொல்லுங்க மேடம்’ என்றும் கூறுகிறார்.

அதனை அடுத்து ’ஒரு வேலையை கொடுக்கும் முன்பே இந்த வேலைக்கு தகுதி இல்லை என்று எப்படி சொல்லலாம் என்றும் தாமரை கேள்வி எழுப்புகிறார். அவரது அடுக்கடுக்கான கேள்வியைக் கேட்டு திணறும் பிரியங்கா ஒரு கட்டத்தில் ’நல்லா பேசுறாங்க மேம்’ என்று ரம்யா கிருஷ்ணனிடம் பிரியங்கா சொல்வதோடு இன்றைய அடுத்த புரோமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் தாமரை மற்றும் பிரியங்கா பிரச்சனையை ரம்யாகிருஷ்ணன் லாவகமாக சரி செய்வாரா? இவர்கள் இருவருக்காக ஒரு குறும்படம் போட்டு காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல நடிகை!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரம்யா கிருஷ்ணன் முன்னிலையில் சிபிக்கு அக்சரா கொடுத்த பனிஷ்மெண்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய இரண்டாவது புரோமோவில் சிபி உட்பட நால்வருக்கும் அக்சரா பனிஷ்மென்ட் கொடுக்கும் காட்சிகள் உள்ளன.

சிம்புவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

நடிகர் அருள்நிதி வீட்டில் குட்டி தேவதை: குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிக்கும் மிகச் சில நடிகர்களில் ஒருவர் அருள்நிதி என்பதும் இவரது அனைத்து படங்களின் கதைகளும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்: முதல் நாளே அசத்திய ரம்யாகிருஷ்ணன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 54 நாட்களாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அவர்கள் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.