close
Choose your channels

பிக்பாஸ் யாஷிகாவின் முதல் பிகினி போஸ்: அள்ளும் லைக்ஸ்கள்!

Thursday, May 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலர் திரையுலகிலும் பிரபலமாகி வரும் நிலையில் நடிகை யாஷிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் டைட்டில் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் அந்த சீசனில் அனைவரும் விரும்பிய போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் யாஷிகா பதிவு செய்யும் ஒவ்வொரு போஸ்டுக்கு லைக்ஸ்களும் கமென்ஸ்களும் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிறத்தில் பிகினி உடையை போன்ற ஒரு காஸ்ட்யூம் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதற்கு முன் பல கவர்ச்சி புகைப்படங்களை யாஷிகா பதிவு செய்தாலும் முதல் முதலாக பிகினி போன்ற ஒரு உடையில் போஸ் கொடுத்ததை பார்த்து அவரது ரசிகர்கள் இன்பஅதிர்ச்சியாகி உள்ளனர். இந்த புகைப்படத்தை யாஷிகா பதிவு செய்து இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை, ஆனால் அதற்குள் சுமார் ஐம்பதாயிரம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.