close
Choose your channels

காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற 'பிகில்' நடிகர்!

Sunday, February 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் தற்போது காவல்துறையில் அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் பதவியைப் பெற்று உள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் விஜய்யின் ராயப்பன் கேரக்டரை கொலை செய்யும் அலெக்ஸ் என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் விஜயன். கேரளாவை சேர்ந்த இவர் ஏற்கனவே ‘திமிறு’, ‘கொம்பன்’ உள்பட ஒருசில படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். விஜயன் நடிகர் மட்டுமின்றி சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது

கேரள காவல்துறையின் கால்பந்தாட்ட அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வந்த இவர் சர்வதேச கால்பந்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பதும் பல கோல்களை இவர் கேரள கால்பந்து அணிக்காக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு அளித்துள்ளது. கேரள காவல் துறையினரிடம் அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் என்ற பதவி உயர்வை தற்போது பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.