close
Choose your channels

சூர்யாவுக்கு தங்கையாக நடிக்கும் 'பிகில்' நடிகை!

Tuesday, March 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்த நடிகை சூர்யாவின் அடுத்த படத்தில் அவருக்கு தங்கை கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ’மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இந்துஜா ரவிச்சந்திரன், அதன் பின்னர் ’பில்லா பாண்டி’, ‘மகாமுனி’, ‘சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதனை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ‘பிகில்’ படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய புகழைத் தந்தது. அதனை அடுத்து ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்துஜா தற்போது விஜய் ஆண்டனியின் ’காக்கி’ தனுஷின் ’நானே வருவேன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் இந்துஜா ரவிசந்திரன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த படத்தில் சூர்யாவின் தங்கை கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் அண்ணன் தங்கை பாசத்தை வைத்து உருவாக்கப்படும் கதை அம்சம் என்பதால் இந்த படத்தில் இந்துஜாவின் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.