close
Choose your channels

'பிகில்' இசை வெளியிட்டின் அட்டகாசமான புதிய அப்டேட்!

Friday, September 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பிகில்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ள இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இம்மாதம் 22ஆம் தேதி ஞாயிறு அன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக சமீபத்தில் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைப் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த இசை வெளியீட்டு விழா சன் டிவியில் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாக சற்று முன் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரடியாக ஒளிபரப்பும் அன்று, டிஆர்பியில் ஒரு புதிய சாதனை ஏற்படுத்தும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.