close
Choose your channels

விஜய்யின் 'பிகில்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்

Wednesday, October 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் அதிக லைக்குகள் பெற்று சாதனை புரிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆகி விட்டதாக செய்திகள் வெளிவந்த போதிலும் தற்போது அதிகாரப்பூர்வமாக சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது

'பிகில்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 179 நிமிடங்கள் எனவும் தெரியவந்துள்ளது. அதாவது இந்த படம் சுமார் 3 மணி நேரம் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்சன் படத்திற்கு மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் என்பது அதிகம் என்றாலும் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்தால் படத்தின் நீளம் பாசிட்டிவ் ஆகவே அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 'பிகில் படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.