close
Choose your channels

விஜய்யின் 'பிகில்' ஒருவாரத்தில் செய்த வசூல் சாதனை

Friday, November 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ‘பிகில்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1100 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தீபாவளி விடுமுறை நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்களில் மட்டும் ரூபாய் 100 கோடி வசூலைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்து விட்ட நிலையில் கடந்த 7 நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் 215 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும், சென்னையில் மட்டும் இந்த படம் 8.93 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

கேரளாவில் ‘பிகில்’ திரைப்படம் ரூபாய் 14 கோடியும் கர்நாடகாவில் 13 கோடியும், ஆந்திராவில் 15.5 கோடியும் வட இந்தியாவில் 3 கோடியும், வெளிநாடுகளில் 65 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் ‘பிகில்’ திரைப்படம் ஒரே வாரத்தில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூலில் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ 180 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

மழை மற்றும் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் வசூல் ஒருசில இடங்களில் பாதிக்கப்பட்டாலும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்கும் இந்த படம் நல்ல லாபத்தை கொடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.