'பிகில்' டீசர் ரிலீஸ் குறித்த புதிய தகவல்

  • IndiaGlitz, [Friday,October 04 2019]

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள், ‘பிகில்’ திரைப்படத்தின் டீஸர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறினார்

இந்த நிலையில் பிகில் டீஸர் ரிலீஸ் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் சற்று முன் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் ‘பிகில்’ படத்தின் டீசருக்கான சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அந்த பணிகள் முடிவடைந்தவுடன் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் ‘பிகில்’ டீசர் குறித்த தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி டீசர் சவுண்ட் மிக்ஸிங் மட்டுமின்றி டிரைலர் சவுண்ட் மிக்ஸிங் பணிகளும் நடைபெற்று வருவதால் டீசர் ரிலீசுக்கு பின் ஒரு சிறு இடைவெளியில் டிரைலரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ‘பிகில்’ படத்தின் சென்சார் பணிகளை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே முடிக்க தயாரிப்பு தரப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரிலீசுக்கு ஒரு வாரம் முன்பே வெளிநாட்டிற்கு கேடிஎம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்படுகிறது

More News

தீபாவளிக்கு மும்முனை போட்டி: பிகில், கைதியுடன் இணைந்த மாஸ் படம்

வரும் தீபாவளித் திருநாளில் விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

கமல் பல்டி அடிச்சாலும் அவர் நினைத்தது மட்டும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

கடந்த சில நாட்களாக அதிமுக அரசு குறித்து கமல் பேசுவதும், அதற்கு அதிமுக அமைச்சர்கள் பதிலடி தருவதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கல்லூரி ஒன்றின் விழாவில் கலந்து கொண்டு

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பிரபல நடிகர் திடீர் விலகல்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது

சாண்டியை உணர்ச்சிவசப்பட்டு அழவைத்த பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிவடையும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அரவிந்தசாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை 'தலைவி' என்ற டைட்டிலில் இயக்குனர் விஜய் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.