திருமணமான 2 நாட்களில் மணமகன் மரணம்: திருமணத்தில் கலந்த 100க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா!

  • IndiaGlitz, [Wednesday,July 01 2020]

பீகாரில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் மணமகன் மரணம் அடைந்ததும் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதுமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பீகார் தலைநகர் பாட்னாவில் 30 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஜூன் 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் மணமகன் திடீரென மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவருக்கு கொரோனா சோதனை செய்யாமலேயே உறவினர்கள் உடலை தகனம் செய்துவிட்டனர். இதனை அடுத்து இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஒருசிலருக்கு அடுத்தடுத்து திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பீகார் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சோதனை செய்தபோது 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். எனவே மணமகணும் கொரோனா பாதிப்பில் தான் உயிரிழந்திருப்பார் என்று கூறப்படுகிறது

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது திருமணத்திற்காக மணமகன் சாப்ட்வேர் இஞ்சினியர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார் என்றும், அவருக்கு அப்போதே கொரனோ வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் ஆனால் அதனை மறைத்து மணமகன் வீட்டார் திருமணத்தை முடித்து விட்டதாகவும் தெரிகிறது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்தார் எனவும் தெரிய வந்துள்ளது

கொரோனாவால் உயிரிழந்தும் இந்த விஷயத்தை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அவருடைய உறவினர்கள் உடலை தகனம் செய்து விட்டனர். மேலும் திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் மணமகன் வீட்டார்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மணமகளுக்கு செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

நடந்ததை எங்கும் சொல்ல தயார்: சாத்தான்குளம் காவலர் ரேவதி

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தமிழகம்

மனசாட்சியுடன் சாட்சி சொன்ன ரேவதி: திரையுலக பிரபலங்கள் பாராட்டு 

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை

தனுஷ் பிறந்த நாளில் 'ஜகமே தந்திரம்' விருந்து: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தின் ஆச்சரிய அறிவிப்பு இன்று காலை 9 மணிக்கு வெளியாகவிருப்பதாக

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலி: அதிர்ச்சி தகவல்

தமிழக தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினமும் சுமார் 4000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதும்

சென்னையில் 2015ஆம் ஆண்டு மழையை விட 10 மடங்கு மழை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை மக்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் மறந்திருக்க மாட்டார்கள். சென்னையே வெள்ளத்தில் மிதந்தது என்பதும் சென்னையில் மக்கள் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வர