கூகுளில் இருந்த பெரிய தவறைச் சுட்டிக்காட்டி அசத்திய 19 வயது மாணவர்!
- IndiaGlitz, [Tuesday,February 08 2022]
உலகத்தில் இருக்கும் முக்கால்வாசி மனிதர்களால் பயன்படுத்தப்படும் கூகுள் செயலில் இருக்கும் ஒரு பெரிய குறைபாட்டைக் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரித்துஜ் சவுத்திரி என்ற மாணவர் தற்போது மணிப்பூர் ஐஐடி நிறுவனத்தில் பயின்று வருகிறார். இணைய மென்பொருள் குறித்த துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் கூகுள் செயலில் இருக்கும் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாட்டை அடையாளம் கண்டு அதை கூகுள் நிறுவனத்திடம் தெரியப்படுத்தி இருக்கிறார்.
P-1 எனப்படும் இரண்டாம் கட்ட குறைபாட்டைக் கண்டுபிடித்து கூறியதால் ரித்துராஜ் சவுத்திரிக்கு கூகுள் நிறுவனம் “Google Hall of Fame Award” எனும் பட்டத்தைக் கொடுத்திருக்கிறது. மேலும் 19 வயதில் கூகுளின் குறைபாட்டைக் கண்டுபிடித்துக் கூறியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டு கிடைத்துக்கிறது.
இதேபோன்று P-0 எனப்படும் முதல்கட்ட குறைப்பாட்டைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு கூகுள் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் வேலை அல்லது அன்பளிப்பு கொடுப்பதை வழக்கமாக வைத்திப்பதும் குறிப்பிடத்தக்கது.