close
Choose your channels

நடு இரவில் தானாக ஓடிய பைக்: வைரல் வீடியோ

Tuesday, February 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்று திடீரென நள்ளிரவில் தானாக ஓடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

சமூக வலைதளங்களில் பல ஆச்சரியமான அதே நேரம் நம்ப முடியாத வீடியோக்கள் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்று திடீரென தானாக நகர்ந்து ஒரு யூ டர்ன் போட்டு கீழே விழுகிறது

’இந்த வீடியோ மட்டும் இல்லை என்றால் நள்ளிரவில் பைக் தானாக நகர்ந்தது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்’ என்று அந்த பெண் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு காமெடியான மற்றும் சீரியசான கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன

இது ஒருவேளை பேயின் வேலையாக இருக்கலாம் என்றும் இன்ஜின் ஆன் செய்யப்பட்டு ஸ்டாண்ட் போட்டிருந்தால் இது மாதிரி ஆக வாய்ப்பு இருக்கிறது என்றும் பலர் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிலரோ இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்றும் இம்மாதிரி நிறுத்தப்பட்டிருக்கும் பைக் தானாக நகர வாய்ப்பே இல்லை என்றும் கூறிவருகின்றனர் உண்மையில் இது என்னவாக இருக்கும் என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.