சிம்புவின் மனைவிக்காக வெயிட்டிங்: பிந்துமாதவி

  • IndiaGlitz, [Friday,May 15 2020]

கொரோனா ஊரடங்கு உத்தரவு விடுமுறையில் நடிகர் சிம்பு நேற்று சமையல் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம். இந்த வீடியோவில் சிம்புவுக்கு வர போற மனைவிக்கு எந்த வேலையும் இல்லை என்று விடிவி கணேஷ் கூறியதும் அவர் மீது கடுப்பான சிம்பு ’வீட்டு வேலை செய்வதற்காக ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறோம்? வீட்டுக்கு வரும் மனைவி என்பவர் ஒரு துணை. அந்த துணையை நாம் வேலைக்காரி போல நடத்தக்கூடாது என்று ஆவேசமாக பேசினார். சிம்புவின் இந்த கருத்து பெண்கள் மத்தியில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் சிம்புவுக்கு மனைவியாக வரப் போகிறவர் கொடுத்து வைத்தவர் என்று திரையுலக பிரபலங்களும், நெட்டிசன்களும் கமெண்ட் அளித்து வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரும் நடிகையுமான பிந்துமாதவி தனது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பதிவு செய்து சிம்புவின் சரியான கொள்கை இதுதான் என்றும் நாங்கள் எல்லோரும் சிம்புவின் மனைவியை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம் என்றும் பதிவு செய்துள்ளார்

பிந்து மாதவியின் இந்த பதிவுக்கு சிம்பு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் நீங்களே சிம்புவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் அட்வைஸ் செய்துள்ளனர். ஒரே ஒரு வீடியோ மூலம் சிம்புவின் இமேஜ் தாறுமாறாக ஏறி விட்டதாக சிம்பு ரசிகர்கள் பெருமை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு: பெரும் பரபரப்பு

144 தடை உத்தரவான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மக்கள் உயிர் தான் முக்கியம், வருமானம் அல்ல: டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கருத்து

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு

கடந்த 10 நாட்களில் குறைவான கொரோனா பாதிப்பு: மீண்டு வரும் தமிழகம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 700க்கும் மேற்பட்டோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்திய நிலையில் நேற்று 509 பேருக்கு கொரோனா

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ கொண்டைக்கடலை இலவசம்: நிர்மலா சீதாராமன்

பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாடியபோது ரூ.20 லட்சம் கோடிக்கான நலத்திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.

கொரோனா சர்ச்சையில் அமெரிக்காவுடன் கைக்கோர்க்கிறதா இந்தியா???

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் கடும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.