விடுதலைப்புலி பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,May 29 2018]

இலங்கை தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்று உருவாகவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தமிழில் 'சீரும் புலிகள்' என்ற டைட்டிலும், ஆங்கிலத்தில் THE RAGING TIGERS என்ற டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை வெங்கடேஷ்குமார் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'லைட்மேன்', 'உனக்குள் நான்' மற்றும் 'நீலம்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டைட்டிலை அறிவித்துள்ள ஸ்டுடியோ 18 நிறுவனம் இதுகுறித்து கூறியபோது, 'மேதகு தமிழ் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இத்தருணத்தில் எங்கள் திரைப்படத்தின் தலைப்பை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்

More News

பாபா ராம்தேவ் அறிமுகம் செய்யும் புதிய சிம்கார்டு

பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி பொருட்கள் நாடு முழுவதும் பிரபலம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பாபா ராம்தேவ் தொலைத்தொடர்பு துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். 

'தமிழ்ப்படம் 2.0' படக்குழுவினர்கள் கலாய்ப்பது யாரை?

நடிகர் சிவா, திஷா பாண்டே நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2.0' திரைப்படம் ஏற்கனவே மே 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.

20 ஆண்டுகள் வாழ்ந்த மனைவியை பிரிந்தார் பிரபல நடிகர்

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பல், தனது மனைவியை 20 ஆண்டுகள் கழித்து பிரிய முடிவு செய்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியீடு: சீல் வைத்தார் கலெக்டர்

தூத்துகுடி மக்களின் நெடுநாளைய போராட்டம் வெற்றி காணும் வகையில் இன்று தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டுள்ளது.

கார்த்தியின் அடுத்த படத்தின் டைட்டில்?

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.