close
Choose your channels

பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

Wednesday, November 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அட்டக்கத்தி' மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிய பா.ரஞ்சித் அதன் பின்னர் 'மெட்ராஸ், 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை இயக்கினார். மேலும் இவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் ரஞ்சித் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இதுவொரு வரலாற்று பின்னணி கொண்ட படம் என்றும் தகவல்கள் வந்தன. அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ரஞ்சித் இயக்கவுள்ள படத்தின் டைட்டில் 'பிர்சா முண்டா' என்று கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு எதிராக வீரச்சமர் புரிந்த பழங்குடி மரபின் கதாநாயகன் "பிர்சா முண்டா"வின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமே இந்த படம் என்றும், இந்த படத்தை நமா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.