மக்களவை தேர்தல்: பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 2 திரையுலகினர் பெயர்..!

  • IndiaGlitz, [Saturday,March 02 2024]

மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி சற்று முன் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டு திரை உலகினரை சேர்ந்தவர்களின் பெயர்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி சற்றுமுன் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியிலும் அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதிகளும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, கேரளாவில் உள்ள திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரபல பாலிவுட் நடிகை ஹேமா மாலினி மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு திரை நட்சத்திரங்களின் தொகுதிகள் உள்பட மொத்தம் 195 பேர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் ஷோபனா அல்லது கீர்த்தி சுரேஷ் அப்பா சுரேஷ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் ராஜீவ் சந்திரசேகர் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

தவறான தகவல் தருகிறார்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த அருண் விஜய்..!

தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் தவறான தகவல் தருகிறார் என பிரபல யூடியூப் சேனல் மீது நடிகர் அருண் விஜய் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நம்பிக்கை நாயகி நயன்தாராவின் கதை

ஆலியா பட்டின் நெட்பிலிக்ஸ் திரைப்படமான டார்லிங்ஸ், ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை ஊக்குவிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

ஆண்களை அடிக்கிறாரா ஆலியா பட்? ஆலியா பட்-க்கு வலுக்கும் கண்டனம்

ஆலியா பட்டின் நெட்பிலிக்ஸ் திரைப்படமான டார்லிங்ஸ், ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை ஊக்குவிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் கில்லி தான் ; வைரலாகும் சமந்தாவின் மார்க் ஷீட்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் 10, 12 வகுப்பு மார்க் ஷீட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த் ; சூப்பர்ஸ்டார் வீட்டில் விசேஷம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கு குழந்தை பிறக்கவுள்ளது.