டிடிவி தினகரனை அடுத்து டெல்லி போலீஸ் வளையத்தில் இரண்டு அதிமுக விஐபிகள்?

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரா மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சித்த டிடிவி தினகரன் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்,. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என்றும் அதன்பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்கவும் டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தினகரன், சுகேஷ் ஆகியோர்களிடம் செய்த விசாரணையில் இந்த குற்றச்செயலுக்கு அதிமுகவின் முக்கிய எம்பி ஒருவர் பின்னணியில் இருப்பதாகவும், அவர் மட்டுமின்றி தினகரனின் வலதுகரமாக செயல்பட்ட இன்னொரு விஐபி என இருவரும் தற்போது டெல்லி போலீஸார் வளையத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் தினகரன் கைதான தகவல் வெளியானதும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருசிலர் தங்களுடைய செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை வளைக்க சென்னைக்கு டெல்லி போலீஸ் டீம் ஒன்று விரைவில் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தினகரன், சுகேஷ் சந்திரசேகருக்குக் கொடுத்த பணம், ஹவாலா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதால் சென்னையைச் சேர்ந்த ஹவாலா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே பாஜகவின் எச்.ராஜா, டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்... 'அடுத்து, அ.தி.மு.க அமைச்சர்கள்' என்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் அதிமுக விஐபிகளின் கைது உள்பட பல செய்திகள் தமிழக அரசியலை பரபரப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மணிரத்னம் பட தோல்விக்கு வைரமுத்து பாடல் காரணமா?

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து இந்த மூன்று ஜாம்பாவன்கள் இணைந்து உருவாக்கிய பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ஒருசில படங்கள் தோல்வி அடைந்தாலும், அந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட் ஆகியிருக்கும். அந்த வகையில் இந்த மூவரும் இணைந்து தோல்வி அடைந்த ஒரு படம் 'திருடா திருடா', ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் சிறந்த பாடல்களாக 

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் தொடங்குவது எப்போது? புதிய தகவல்

தனுஷ் இயக்கிய 'ப.பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' படத்தில் நடித்து வருகிறார். மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும் இறுதிக்கட்டத்தில் உள்ளது...

ஜனாதிபதி பதவிக்கு இவர் ஒருவர்தான் தகுதியானவர். சுப்பிரமணியன் சுவாமி

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் கிட்டத்தட்ட பாஜக தேர்வு செய்யும் வேட்பாளர்தான் அடுத்த ஜனாதிபதி என்பது உறுதியாகியுள்ளது...

ரஜினி பட லொகேஷனில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

'ரெமோ' படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் நடித்த 'வேலைக்காரன்' பட டைட்டிலில் உருவாகி வரும் படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மோகன் ராஜா இயக்கி வரும் இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கின்றார்...

தினகரன் கைது! அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன?

இரட்டை இலை சின்னத்தை பெற கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் சுமத்தப்பட்டு அதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.