நீட் ஆதரவு தாய் தற்கொலையின் போது எங்கே போனீர்கள்? எச்.ராஜா

  • IndiaGlitz, [Saturday,September 02 2017]

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அனைத்து முயற்சிகளிலும் தோல்வி அடைந்த பின்னர் தனது மருத்துவ படிப்பு என்ற கனவு முற்றிலும் கலைந்ததை தாங்க முடியாமல்தான் நேற்று மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலையை யாரும் நியாயப்படுத்தவில்லை. நினைத்த படிப்பு, நினைத்த வேலை, நினைத்த வாழ்வு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை என்று முடிவெடுத்தால் இன்று யாருமே உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். அது அனைவருக்கும் தெரியும். ஒரு நிமிடத்தில் எடுக்கும் உணர்ச்சிவசப்பட்ட முடிவுதான் தற்கொலை. ஆனால் அதற்காக அந்த மாணவியின் இறப்பில் சந்தேகப்படுவது, அவருடைய உழைப்பை கொச்சைப்படுத்துவது, மரணத்தை வைத்து அரசியல் செய்வது என்பது மிருகச்செயல்

அனிதாவின் மரணத்தால் தமிழகமே துன்பக்கடலில் மூழ்கியிருக்கும் நிலையில் அவரது மரணத்தையே கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனிதாவின் மரணம் தற்கொலையா என விசாரணை நடத்த வேண்டும். என்றும், வேலூரில் நீட்-க்கு ஆதரவான மாணவனின் தாய் தற்கொலை செய்து கொண்டபோது இன்று குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினர் எங்கே சென்றிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீட் குறித்து மத்திய அரசு மீது கடுமையாக விமர்சனம் செய்த வைகோவுக்கு, 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசு மீற முடியாது என்றும் கள்ளத் தோனியில இலங்கை போகும் விஷயமல்ல நீட் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி விஷயத்தில் இதே உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசும், மாநில அரசும் மதித்ததா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. பிணத்தில் கூட அரசியல் செய்ய நினைக்கும் இதுபோன்ற அரசியல்வாதிகளை பொதுமக்கள் நன்றாக ஞாபகம் வைத்து தேர்தலின்போது தங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்

More News

இந்த அரசு யாருக்கான அரசு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பா.ரஞ்சித்

மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவுக்கு கோலிவுட் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நேற்று ஜி.வி.பிரகாஷ் அரியலூர் சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதை பார்த்தோம், இந்த நிலையில் இன்று 'கபாலி', 'காலா' இயக்குனர் ரஞ்சித் அனிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை &

ஏழை மாணவியின் எம்பிபிஎஸ் சீட்டுக்கு நேரடியாக தலையிட்ட கேரள முதல்வர்

1176 மதிப்பெண்கள் எடுத்து உயிரையும் கொடுத்த நிலையில் ஏழை மாணவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்காத முதல்வர் மத்தியில் ஏழை மாணவி ஒருவருக்கு சீட் கிடைக்க தானே முன்வந்து உறுதி மொழி கொடுத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்...

இறந்த காலமாகிவிட்டது ஒரு இளந்தளிர். அனிதா குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டதற்கு ஆவேசமாக கண்டனக்குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதுகுறித்து பேசுகிறார்...

முதல்வர் அறிக்கையில் 'நீட்'டும் இல்லை, நீதியும் இல்லை: நெட்டிசன்கள் கருத்து

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிய அனிதா நேற்று பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்....

அனிதாவின் அவசரம் முன்னுதாரணம் அல்ல: நடிகர் விவேக்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று பல கோலிவுட் பிரபலங்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்...