பிரபல தமிழ் நடிகையின் தாத்தா அடுத்த ஜனாதிபதியா?

  • IndiaGlitz, [Tuesday,January 31 2017]

கர்நாடக மாநில முதலமைச்சர், மகாராஷ்டிரா மாநில கவர்னர், மத்திய அமைச்சர் என பல பதவிகளில் இருந்த பழம்பெரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எஸ்.எம்.கிருஷ்ணா, பாஜகவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் விரைவில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்து பாஜகவில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆறு மாதமாகவே எஸ்.எம்.கிருஷ்ணா ரகசியமாக பாஜக மேலிடத்தலைவர்களிடம் இதுகுறித்து ஆலோசனை செய்து வந்ததாகவும், ஜனாதிபதி வேட்பாளருக்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்ததாகவும் பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். எனவேதான் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

More News

இளையதளபதி விஜய்யின் 61வது படத்தின் அதிகாரபூர்வ தகவல்

இளையதளபதி விஜய் நடிக்கும் 61வது படம் குறித்து பல்வேறு செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தோம்.

ஜல்லிக்கட்டு வன்முறையில் கைதான மாணவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுக்கான புரட்சி போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை வெடித்தது

இணைவதற்கு முன் மோதலுக்கு தயாராகும் அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ்

அஜித் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் அஜித் படத்தை இயக்கவேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் அவ்வப்போது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்...

விக்ரமுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா

விக்ரம்-விஜய்சந்தர் இணையும் படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிப்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்களின்படி இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது...

ரஜினிதான் என் முதல் சாய்ஸ். மோகன்லால் இயக்குனர்

மோகன்லால்-மீனா நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் இதே ஜோடி நடித்த 'முன்திருவல்லிகள் தளிர்க்கும்போல்' என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் ரஜினி நடிக்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனர் ஜிபு ஜாக்கப் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்....