'மாஸ்டர்' படப்பிடிப்புக்கு மீண்டும் வந்த சிக்கல்: கோலிவுட்டில் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென வருமான அதிகாரிகளால் விஜய் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கப்படவில்லை என்றாலும் அதே சுரங்கத்தில் மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது

இந்த நிலையில் வருமான வரி சோதனை முடிந்து இன்று மீண்டும் விஜய் ’மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி தரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்துவதாகவும் அவர்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் வீட்டில் ரெய்டு நடந்ததற்கு மத்திய அரசு காரணம் என அரசியல் விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பாஜகவினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சூப்பர்ஹிட் பட ரீமேக்கில் நடிக்கும் அப்பா-மகள்

கடந்த ஆண்டு வெளியான மலையாள சூப்பர் ஹிட் திரைப்படம் 'ஹெனல்'. அப்பா மகள் குறித்த உறவை கொண்ட இந்த படத்தின் இரண்டாம் பாதியில் திடீரென மகள் காணாமல் போக,

பிரபல நடிகர் இயக்கிய படத்தில் பாடகராகிய ரோபோ சங்கர்

'தீரன் அதிகாரம் ஒன்று', 'தேவராட்டம்' உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் போஸ் வெங்கட் முதல் முறையாக இயக்கி வரும் திரைப்படம் 'கன்னிமாடம்'

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் குறித்து சூப்பர் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும்

சிறுத்தைக்கும் ராட்சத பல்லிக்கும் நடக்கும் சண்டை..! வைரல் வீடியோ.

வீடியோவில் ஒரு ராட்சச பல்லி தன்னைவிட வலிமை மிகுந்த சிறுத்தையுடன் தன்  உயிரைத் தற்காத்துக்கொள்ளப் போராடுகிறது. 

"என்னைப் போலவே விளையாடும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா"..?! சச்சின் டெண்டுல்கரின் பதில்.

எனக்கு எப்போதும் ஒப்பீடுகள் பிடிக்காது. என்னை பலருடன் ஒப்பிடப் பார்த்தனர், எங்களை எங்களாகவே இருக்க விடுங்கள். நாம் ஒப்பீடுகளுக்குள் செல்ல வேண்டாம்.