வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சூர்யா?

  • IndiaGlitz, [Monday,May 20 2019]

இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் இதுவரை 'சென்னை 600028 2' மற்றும் 'ஆர்.கே.நகர்' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் மூன்றாம் தயாரிப்பு குறித்த தகவல் இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

பிளாக் டிக்கெட் கம்பெனியின் 3வது படம் ஒரு ஆச்சரிய அறிவிப்பாக இருக்கும் என்றும், இந்த படத்தின் தகவல்களை நந்த கோபாலன் குமரன் வெளியிடுவார் என்றும் அதாவது சூர்யா வெளியிடுவார் என்றும் வெங்கட்பிரபு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் 'மாஸ் என்கிற மாசிலமணி' என்ற படத்தை இயக்கிய வெங்கட்பிரபு மீண்டும் அவர் நடிக்கும் படத்தை இயக்குவாரா? என்பதை 7 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் நீண்ட நாள் காலதாமதம் ஆகி வரும் 'ஆர்.கே.நகர்' திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்றும், சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

More News

விஐபி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு: பிரபல நடிகை கணிப்பு

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில் தேசிய, மாநில ஊடகங்கள் நேற்று மாலை முதல் தங்களது எக்சிட்போல் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

உலகிலேயே இதுதான் முதல்முறை: ரஜினிகாந்த்தின் பாராட்டு யாருக்கு தெரியுமா?

இயக்குனர், நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும்

200 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் கஷ்டம்: சென்னையின் நிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர்கஷ்டம் இருந்து வரும் நிலையில் ஃபானி புயலால் மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயலும் ஒடிஷா பக்கம் திரும்பிவிட்டதால்

இன்னொரு செருப்புக்காக காத்திருக்கின்றேன்: கமல்ஹாசன்

பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள 'ஒத்த செருப்பு' இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது:

ஒத்த செருப்பு இசை வெளியீடு: கமலுக்கு கொடுத்த செங்கோலில் டுவிஸ்ட்!

இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து வரும் திரைப்படம் 'ஒத்த செருப்பு. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது.