புளூசட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

புளூசட்டை மாறன் இயக்கிய ‘ஆன்டி இண்டியன்’ என்ற திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புளூசட்டை மாறன் கூறியிருப்பதாவது:

டிசம்பர் 3ஆம் தேதி நமது படமான ‘ஆன்டி இண்டியன்’ ரிலீஸ் என்று தெரிவித்து இருந்தோம். தற்போது அதில் ஒரு மாற்றம். டிசம்பர் முதல் வாரத்தில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. 3ஆம் தேதியன்று பிரபல நடிகர்களின் படங்களும் வெளியாகிறது. ஆகவே குறிப்பிட்ட நாளில் போதுமான திரையரங்குகள் கிடைப்பது கடினம் என்பதால் ஒரு வாரம் தள்ளி பத்தாம் தேதி வருவதென முடிவு செய்துள்ளோம்.

நீண்ட நாட்கள் காத்திருந்து விட்டோம். மேலும் ஒரு வாரம் தாமதமானால் தவறு இல்லை என்பதாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் உள்ள போதுமான அரங்குகளில் வெளியானால் பலரையும் சென்றடையும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
 

More News

மருத்துவமனையில் இருந்து தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்: பிக்பாஸில் இன்னும் ஒரு ஆச்சரியம்!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த இளம் நடிகரா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

'மாநாடு' படத்தின் இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா? சுரேஷ் காமாட்சி தகவல்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது என்பதும் ஒரு கட்டத்தில் ரிலீசுக்கு முந்தைய தினத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக தயாரிப்பாளர்

2 மரங்களை 85 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய அம்பானி… என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்தியத் தொழில்துறையில் கொடிக்கட்டி பறந்துவரும் முகேஷ் அம்பானி 180

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்புவின் அடுத்த சூப்பர்ஹிட் படம்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது.