இறவியை முடித்த எஸ்.ஜே.சூர்யா-பாபிசிம்ஹா

  • IndiaGlitz, [Monday,July 20 2015]

பீட்சா, ஜிகர்தண்டா படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் மூன்றாவது படமான 'இறவி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி, அஞ்சலி உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் முடிந்துவிட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதி-அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாக ஏற்கனவே பார்த்தோம்.


இந்த படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபிசிம்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது விஜய்சேதுபதி -அஞ்சலி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பில் நடிகை கமாலினி முகர்ஜி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இவர் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் கருணாகரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனங்கள் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

More News

மீண்டும் தொடங்கியது பாலாவின் 'தாரை தப்பட்டை'

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது...

காக்க காக்க, தடையற தாக்க வரிசையில் 'தாக்க தாக்க'

சூர்யாவுக்கு 'காக்க காக்க' படமும், அருண்விஜய்க்கு 'தடையற தாக்க' படமும் கொடுத்த திருப்புமுனையை இளையதளபதி விஜய்யின் உறவினரான விக்ராந்துக்கு 'தாக்க தாக்க' படம் ...

கமல்ஹாசனை அடுத்து ஜெயம் ரவி?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'உத்தம வில்லன்' திரைப்படத்தின் சென்னை சிட்டி வெளியீட்டு உரிமையை பெற்ற அபிராமி ராமநாதன்...

ரஜினி-ரஞ்சித் படத்தின் நாயகி ராதிகா ஆப்தே?

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது...

சென்னை மெட்ரோ ரயிலில் த்ரிஷா பயணம்

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.......