close
Choose your channels

சீயான் விக்ரமின் 'சாமி 2' படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ

Thursday, June 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவநட்சத்திரம்' மற்றும் விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விரைவில் விக்ரம், ஹரி இயக்கத்தில் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகர்களை இறுதி செய்யும் பணியில் இயக்குனர் ஹரி தற்போது தீவிரமாக உள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ், மற்றும் ஒரு முக்கிய கேரக்டரில் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் மெயின் வில்லன் கேரக்டருக்கு பாபிசிம்ஹாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வில்லன் நடிகரான பாபிசிம்ஹா சமீபத்தில் ஹீரோவாக புரமோஷன் ஆன நிலையில் மீண்டும் ஹரி-விக்ரம் கூட்டணிக்காக வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படத்தை ஷிபுதமீன்ஸ் தயாரிக்கவுள்ளர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.