பாஜகவில் இணைந்த பிரபல நடிகரின் மகன்! தேர்தலில் போட்டியா?

  • IndiaGlitz, [Tuesday,April 23 2019]

தேர்தல் நேரத்தில் திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்று வருகின்றனர் என்பதை ஏற்கனவே ஒருசில செய்திகள் மூலம் பார்த்தோம்.

இந்த நிலையில் பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகரான தர்மேந்திராவின் மகனும் பாலிவுட் நடிகருமான சன்னி தியோல் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் இன்று அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இன்று பாஜகவில் இணைந்த சன்னிதியோல் அமிர்தசரஸ் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமாமாலினி ஏற்கனவே மதுரா தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும், சன்னிதியோல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.