close
Choose your channels

மும்பை ஏர்போர்ட்டில் டான்ஸ் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி பட நாயகி!

Saturday, December 7, 2019 • தமிழ் Comments

மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென டான்ஸ் ஆடியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீபிகா படுகோனே திரையில் டான்ஸ் ஆடினாலே ரசிகர்கள் எழுந்து ஆடத் தொடங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு அவருடைய டான்ஸூக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வரும் நிலைய்ல் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தீபிகா படுகோனே மும்பை ஏர்போர்ட் வளாகத்தில் டான்ஸ் ஆட, அவருக்கு பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யா என்பவர் ஸ்டெப் சொல்லித்தர அந்த இடமே பெரும் கலகலப்பானது. மும்பை விமான நிலையத்தை பாதுகாக்கவேண்டிய பாதுகாவலர்களும் இந்த டான்ஸை பார்த்து அசந்து போய் விட்டதாக தெரிகிறது.

முதலில் இந்த வீடியோவில் இருப்பவர் தீபிகா படுகோன் தானா? அல்லது அவரைப் போலவே இருக்கும் டிக்டாக் பிரபலமா? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது ஆனால் இது தீபிகா படுகோனே தான் என்பது உறுதி செய்யப்பட்டவுடன் இந்த வீடியோ தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த டான்ஸை பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் இவ்வாறு மக்கள் கூடும் ஏர்போர்ட்டில் பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் டான்ஸ் ஆடுவது தவறு என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

தீபிகா படுகோனே, ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் நாயகியார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz