29 வருடத்தில் ஒரு முத்தக்காட்சி கூட இல்லை.. 48வது வயதில் லிப்கிஸ் காட்சியில் நடித்த பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Wednesday,July 19 2023]

பிரபல நடிகை ஒருவர் 29 வருடங்களில் ஒரு முத்த காட்சியில் கூட நடிக்காத நிலையில் இப்போது 48வது வயதில் ஒரு லிப்கிஸ் காட்சியில் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தமிழில் ’மின்சார கனவு’ மற்றும் ’வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் கஜோல் நடிப்பில் வெளியாகி உள்ள ‘டிரையல்’ என்ற வெப்தொடர் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. எதிர்பாராத வகையில் கணவர் சிறைக்குச் செல்ல, குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட கஜோல் 10 வருடங்கள் கழித்து மீண்டும் வழக்கறிஞர் தொழிலை செய்து வருகிறார். அவர் அடுத்தடுத்து தனது வாதங்களினால் வெற்றி பெற்று வரும் நிலையில் அவருக்கு ஏற்படும் சிக்கல்களை அவர் எவ்வாறு சமாளிக்கிறார், கணவரை சிறையில் இருந்து மீட்டு கொண்டு வந்தாரா? என்பதுதான் இந்த வெப் தொடரின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவருடைய முன்னாள் காதலரின் நிறுவனத்தில் வேலை செய்யும் கஜோல் திடீரென முன்னாள் காதலர் லிப்கிஸ் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார். அடுத்த காட்சியில் அவர் தனது கணவருக்கு லிப்கிஸ் கொடுக்கும் காட்சியை நினைத்து பார்ப்பது போலும் நடித்துள்ளார்.

எனவே இந்த வெப் தொடரில் அவர் அடுத்தடுத்து இரண்டு நடிகர்களுடன் லிப்கிஸ் காட்சியில் நடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலாவதாக அவரது முந்தைய காதலன் ஆலிகான் என்பவருடன் ஒரு முத்தக் காட்சியும் அதன் பிறகு தன் கணவராக நடித்த ஜிஷ்சு சென்குப்தா என்பவருடன் ஒரு முத்தக் காட்சியிலும் கஜோல் நடித்துள்ளார் இந்த இரண்டு லிப்கிஸ் காட்சிகளும் அடுத்தடுத்து ’டிரையல்’ வெப் தொடரில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

29 ஆண்டுகளாக முத்தக்காட்சியில் நடிக்காமல் இருந்த நடிகை கஜோல் தற்போது தனது கொள்கையை தள்ளி வைத்துவிட்டு 48வது வயதில் முதன்முறையாக லிப்கிஸ் காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜோல் கணவர் நடிகர் அஜய் தேவ்கான் ஏற்கனவே தபு, ரகுல் ப்ரீத் சிங் உட்பட பல நடிகைகளுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

3 மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக முடிந்த வியாபாராம்.. பக்கா பிளானுடன் 'லியோ' தயாரிப்பாளர்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின்

சுப்ரமணியபுரம்- பட நடிகை சுவாதி விவாகரத்து செய்கிறாரா? தீயாய் பரவும் தகவல்

சசிக்குமார் இயக்கத்தில் நடிகர் ஜெய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான

யூடியூப் பார்த்து பல் வலிக்கு வைத்தியம் செய்த இளைஞர்… பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…!

ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளுக்காக படித்துவந்த இளைஞர் ஒருவர் பல் வலிக்கு வைத்தியம் செய்வதற்காக யூடியூப் பார்த்து அரளி விதைகளை அரைத்துச் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம்

லோகேஷ் கனகராஜின் அடுத்த ஐந்து படங்கள் இவை தான்..! 4 வருடங்கள் பிசியா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடித்த 'லியோ' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்து வருகின்றன

'லால் சலாம்' நடிகைக்கு ஒரு ஆண்டு ஜெயில்.. கணவருக்கும் சிறை தண்டனை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மற்றும் அவரது கணவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது