தமிழில் மீண்டும் கங்கனா ரனாவத்.. இயக்குனர், நாயகன், இசையமைப்பாளர் யார் யார்?

  • IndiaGlitz, [Thursday,March 14 2024]

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்தார் என்பது தெரிந்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவர் மீண்டும் வா உருவான ’சந்திரமுகி 2’ படத்தில் நடித்தார் என்பதும் இந்த படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்றும் இந்த படத்தின் நாயகன், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ படத்தை இயக்கிய விஜய் தான் மீண்டும் இந்த படத்தை இயக்கி வருவதாகவும் இந்த படத்தின் நாயகனாக நடிகர் மாதவன் நடித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் விஜய்யின் படங்களுக்கு பொதுவாக ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வரும் நிலையில் ’வனமகன்’ படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்து உள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் அஹிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மேலும் சில விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'லியோ'வை அடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா? வேற லெவல் தகவல்..!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா தற்போது மீண்டும் பிஸி ஆகி உள்ளார் என்பதும் விஜய், அஜித், கமல்ஹாசன், மோகன்லால், நிவின்பாலி, சிரஞ்சீவி என

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் வரலட்சுமிக்கு தொடர்பா? அவரே அளித்த விளக்கம்..!

நேற்று நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்துள்ள நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி போதை பொருள் விவகாரத்தில் சிக்கி

ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் ? 45 நாட்கள் கிரக யுத்தம் !

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம், மீனம்ஆகிய ராசிக்காரர்களை இந்த கிரக யுத்தம் எவ்வாறு பாதிக்கும்?

ஜெயமோகனின் உள்நோக்கம் என்ன? 'மஞ்சும்மெல் பாய்ஸ்' விமர்சனத்திற்கு பிரபல இயக்குனர் பதிலடி..!

எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஜெயமோகன் சமீபத்தில் 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில் அவருக்கு மலையாளத் திரை உலகினர் கண்டனம்

அஜித் ரசிகர்களுக்கு நாளை ஒரு இன்ப அதிர்ச்சியா? 'விடாமுயற்சி' சூப்பர் அப்டேட்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆனபோதிலும் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை