சம்பளம் இன்றி நர்ஸாக பணிபுரியும் பிரபல நடிகை

பாலிவுட் திரையுலகின் காஸ்டியூம் டிசைனராக இருந்து அதன்பின் நடிகையாக மாறியவர் ஷிகா மல்ஹோத்ரா. ’அன்சீன்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்த ஷிகா, சமீபத்தில் வெளியான ‘காஞ்சி லைஃப் இன் எ சிலாஹ்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஷிகா மல்ஹோத்ரா நர்சிங் படித்தவர் என்பதும் காஸ்ட்யூம் டிசைனராகவும் நடிகையாகவும் மாறுவதற்கு முன் அவர் நர்சாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் படப்பிடிப்புகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளதால் மீண்டும் நர்சாக அவர் களமிறங்கியுள்ளார்.

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து கொண்டிருக்கும் அவர் தனது நர்ஸ் பணிக்காக சம்பளம் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான தருணத்தில் மக்களுக்கு தனது நர்ஸ் பணியை ஆற்ற வந்திருப்பதாகவும் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் தனது சமூக வலைதளம் மூலம் கூறியுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் அனைத்து நடிகர் நடிகைகளும் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தனது பழைய நர்ஸ் பணியை மீண்டும் கையில் எடுத்துள்ள நடிகை ஷிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

தமிழகத்தில் மேலும் 17 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: முதல்வர் பழனிச்சாமி தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சற்றுமுன் ஆலோசனை செய்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக நாயகன் நடிகர் கமலஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸுக்கு எதிரான விழிப்புணர்வு

பிரபல நகைச்சுவை நடிகர் கொரோனாவிற்கு பலி: ரசிகர்கள் அதிர்ச்சி

ஏழை முதல் பணக்காரர் வரை, பாமரர் முதல் பெரிய பதவியில் இருப்பவர் வரை பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவரும் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளது

சமூக விலகல் (Social Distancing) ஏன் அவசியமாகிறது??? விலகலில் பல வகைகள்!!!

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது

கொரோனா 3 ஆம் கட்டம் என்றால் என்ன??? இந்தியாவின் நிலைமை???

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தை எட்டியிருக்கிறது.