கெளதம் மேனனின் அடுத்த படத்தில் பாலிவுட் - கோலிவுட் ஹீரோக்கள்.. மாஸ் ஆக்சன் படமா?

  • IndiaGlitz, [Tuesday,February 21 2023]

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் கோலிவுட் மற்றும் பாலிவுட் பிரபல ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகின் ஸ்டைலிஷான இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன் என்பதும் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.

தற்போது விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தின் இறுதி கட்ட பணியில் இருக்கும் கௌதம் மேனன், ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் கோலிவுட் பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் பிரபா நடிகர் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையை இருவரிடமும் கெளதம் மேனன் கூறி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகும் இந்த படம் நிச்சயம் ஒரு பான் இந்திய படமாக தான் இருக்கும் என்றும் இந்த படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மேலும் சில விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித்தின் 'ஏகே 62' டைட்டில் ரிலீஸ் எப்போது? பரபரப்பு தகவல்..!

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படமான  'ஏகே 62' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும்

'தனுஷ் 50' படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமா?

தனுஷின் 50வது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தனுஷ் இயக்க இருப்பதோடு சிறப்பு தோற்றத்திலும் நடிக்க

5 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்.. பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்..!

ஐந்து வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவத்தில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஞ்சள் சேலையில் மயக்கும் கிளாமர்.. ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ஸ்ரேயா சரண் மஞ்சள் சேலை காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷுட்  புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது 

என் மனைவி வேலைக்கு சென்றதால் தான் சினிமாவில் ஜெயித்தேன்: லோகேஷ் கனகராஜ்

 என் மனைவி வேலைக்கு சென்று குடும்பத்தில் சப்போர்ட்டாக இருந்ததால் தான் என்னால் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது என்று பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.