கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல பாடகி!

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னதாக லண்டனில் இருந்து திரும்பி வந்த கனிகாகபூர், மத்திய அமைச்சர் உள்பட 56 பேர் கலந்து கொண்ட ஒரு விருந்தில் கலந்து கொண்டதாகவும் இதனையடுத்து அந்த 56 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியானதே.

இந்த நிலையில் பாடகி கனிகாகபூருக்கு நான்கு முறை கொரோனா சோதனை எடுக்கப்பட்டதாகவும் நான்கிலும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்ததால் அவரது குடும்பத்தினர் பெரும் கவலை அடைந்ததாக செய்திகள் வெளியானது.

இருப்பினும் அவரது உடல் நிலை சீராக இருப்பதால் அவருக்கு விரைவில் நெகட்டிவ் வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் இந்த நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக அவருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டபோது நெகட்டிவ் என வந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவருக்கு இன்னொரு சோதனையிலும் நெகட்டிவ் வரும்வரை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட மாட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கனிகா கபூர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது கூறியதாவது: விரைவில் கொரோனாவில் இருந்து வெளியேறுவேன். காலம் நமக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுக்கிறது, அதே நேரத்தில் கலம் நமக்கு வாழ்க்கையின் மதிப்பைக் கற்பிக்கிறது. நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் நான் ஐ.சி.யுவில் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். எனது அடுத்த சோதனையும் நெகடிவ் என வரும் என்று நம்புகிறேன்’ என்று கூறியிருந்தார்.

More News

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு 4வது பலி

கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் சிகிச்சை செலவு எவ்வளவு? 

கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு முழு சிகிச்சை செலவு இலவசம் என்பது தெரிந்ததே.

கொரோனா சிகிச்சைக்காக திருமணத்தை தள்ளி வைத்த கேரளா பெண் மருத்துவர்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவர்கள் நர்ஸ்கள் தன்னலம் கருதாது நாளொன்றுக்கு 15 மணி நேரத்தில் இருந்து 20 மணி நேரம் வரை பணி செய்து வருகின்றனர்

கொரோனா நேரத்தில் நினைவுகூருவோம்; இன்னும் சரிசெய்யப்படாத போபால் அணுவுலை வெடிப்பின் கோரங்கள்!!!

இந்த நூற்றாண்டில் இந்தியா சந்தித்த பெரும் பேரழிவு போபால் அணுவுலை வெடிப்பு. இதன் விளைவுகளையே இன்னும் இந்தியாவில் சரிச்செய்யப்படாத நிலையில் கொரோனா வந்து தாக்கிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: சுகாதார செயலாளர்

தமிழகத்தில் ஏற்கனவே 411 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்றி