close
Choose your channels

வாரிசு நடிகர்கள் அவித்த முட்டை போல் இருக்கின்றார்கள்: பிரபல நடிகையின் சர்ச்சை கருத்து!

Monday, May 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் நடிகைகளின் வாரிசுகள் அவித்த முட்டை போல் இருக்கிறார்கள் என்று பிரபல நடிகை ஒருவரின் சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களிலும் சரி, பேட்டிகளிலும் சரி, பொது மேடைகளிலும் சரி சர்ச்சைக்குரிய வகையில் அவ்வப்போது பேசுபவர் நடிகை கங்கனா ரனவத், தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்திலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் ரசிகர்களோடு ஒன்றிணைய முடியவில்லை என்றும் அவர்கள் வெளிநாட்டில் படித்து, ஆங்கிலம் மட்டுமே பேசி, ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்த்து திடீரென பாலிவுட் படங்களில் நடிப்பதால் அவர்கள் ரசிகர்களுடன் ஒன்றிணைய முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் தென்னிந்திய சினிமாக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றும் தென்னிந்திய ஹீரோக்கள் ரசிகர்களோடு ரசிகர்களாக இருக்கின்றார்கள் என்றும், அதனால்தான் பாலிவுட் படங்களை விட தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் அவித்த முட்டை போன்று இருக்கிறார்கள் என்றும் நான் யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டும் என்று கூறவில்லை என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.