குடும்பத் தலைவி என்றால் சும்மாவா??? மும்பை நீதிமன்றத்தில் சூடு கிளப்பிய வழக்கு!!!

  • IndiaGlitz, [Saturday,September 26 2020]

சாலை விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் இறப்புக்கு நஷ்ட ஈடு கேட்ட வழக்கு ஒன்றில் மகாராஷ்டிரா நீதிமன்றம் அந்தப் பெண் வீட்டைப் பராமரிப்பவர் மட்டுமே, எந்த வேலையிலும் அவர் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த தீர்ப்பை கேட்ட அப்பெண்ணின் கணவர் வீட்டைப் பராமரிப்பது, குடும்பத் தலைவியாக இருப்பது என்றால் சும்மாவா என வெதும்பி மும்பை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். அந்த வழக்கு தற்போது கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியை சேர்ந்தவர் ராம்பாஹீ கவாய். இவருடைய மனையி பேபிபாய். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்து இருக்கிறார். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த தனது மனைவியின் இறப்புக்கு நஷ்டஈடு கேட்டு ராம்பாஹீ நீதிமன்றத்தில் மனு அளித்து இருக்கிறார். இந்த வழக்கின் விசாரணையின்போது, பேபிபாய் குடும்பத்தை பராமரிப்பவர் மட்டுமே, வீட்டில் சும்மா இருப்பவருக்கு எப்படி நஷ்ட ஈடு வழங்க முடியும் என வாகன விபத்து தீர்ப்பாயம் நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறது.

வாகன விபத்து தீர்ப்பாயத்தின் இந்தக் கருத்தைக் கேட்ட ராம்பாஹீவுக்கு கடும் கோபம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே இதே கருத்தை குறிப்பிட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்காகத் தொடுத்து இருக்கிறார். அந்த வழக்கில் குடும்பத்தை பராமரிப்பது என்பது சாதாரண காரியமல்ல… எனவே எனது மனைவியின் இறப்புக்கு நீங்கள் கட்டாயம் நஷ்டஈடு வழங்கித்தான் ஆக வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்ற நீதிபதி அனில் கிலோர், “குடும்பத்தை கவனிக்கும் மனைவியின் பணி மிகவும் முக்கியமானதும் சவாலானதும் ஆகும். வீட்டை பார்த்துக் கொள்ளும் மனைவி குடும்பத்துக்கு அளிக்கும் பங்கை பண சம்பாத்தியத்தோடு ஒப்பிட முடியாது. ஒரு மனைவி குடும்பத்தையே தாங்குகிறார். தனது கணவருக்கு ஆதரவாக தூண்போல விளங்குகிறார்.

விடுமுறையும் இல்லாமல் உழைக்கிறார். ஆனாலும் இந்த உழைப்புக்கு அங்கீகாரமோ, பாராட்டோ கிடைப்பதில்லை. அது ஒரு தொழில்முறை பணியாகவும் கருதப்படுவது இல்லை. இதற்காக அவருக்கு சம்பளமும் கிடையாது. குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் மனைவி இறந்தால் அதனால் பல்வேறு சேவைகளை குடும்பம் இழக்கிறது. எனவே பேபிபாய் இறப்புக்கு நஷ்டஈடு வழங்கலாம். பேபிபாயின் கணவருக்கும் அவரது 2 மகன்களுக்கும் காப்பீடு நிறுவனம் ரூ.8 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டு இருக்கிறார். இத்தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு அளித்து இருக்கின்றனர்.

More News

கொரோனாவால் இறந்து 14 நாள் கடந்தும்… உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்கும் மருத்துவமனை!!! கொடூரச் சம்பவம்!!!

பெங்களூரு அடுத்த ஸ்ரீநகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த முதியவரின்

ATM அமைத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய இளைஞர்… குவியும் பாராட்டுகள்!!!

கொரோனா தாக்கத்தால் வறுமையில் வாடிய நபர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்த இளைஞர்

முழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்தார்.

எஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவரகள் நேற்று காலமான நிலையில் அவருடன் பழகிய நாட்களை திரையுலக பிரமுகர்கள் பகிர்ந்து கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி!

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு புரோகிதர்கள் இறுதிச்சடங்குகளை சற்றுமுன் தொடங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.