close
Choose your channels

தனுஷ் நாயகியின் படத்தை ரீமேக் செய்யும் போனிகபூர்: பரபரப்பு தகவல் 

Monday, October 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ’பிங்க்’ என்ற படத்தின் ரீமேக் படமான ’நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தை தயாரித்த போனி கபூர் தற்போது அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் ‘வலிமை’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மஞ்சு வாரியரின் ’Prathi Poovankozhi’ என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் பெற்றுள்ளார். இந்த படத்தின் அனைத்து இந்திய மொழி ரீமேக் உரிமையையும் அவர் பெற்றுள்ளதாகவும் இதனை அவர் ஹிந்தி தமிழ் உள்பட ஒரு சில மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Prathi Poovankozhi என்ற திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி இருந்தார் என்பதும் இந்த திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் மஞ்சுவாரியர் நடித்து இருந்தார் என்பதும் இது ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட சூப்பர் ஹிட்டான திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’, மலையாள திரைப்படமான ‘ஹெலன்’ ஆகிய படங்களின் இந்தி ரீமேக் உரிமையையும் போனிகபூர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.