close
Choose your channels

போனிகபூரின் அடுத்த தமிழ்ப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, February 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் போனிகபூர் தயாரிக்கும் இன்னொரு திரைப்படமான ’மைதான்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது

’மைதான்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகி வருகிறது என்பதும் இந்த படத்தின் நாயகனாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடித்து வருகிறார் என்பதும் நாயகியாக தேசிய விருது பெற்ற பிரியாமணி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கி வரும் இந்த படத்தின் படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என சற்று முன்னர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டு வரும் நிலையில் தற்போது போனிகபூர் ’மைதான்’ ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வலிமை படத்தின் அப்டேட் எப்போது வரும் என தொடர்ச்சியாக அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.