போனிகபூரின் மாஸ் 'வலிமை' அப்டேட்: ஸ்தம்பிக்கும் சமூக ஊடகங்கள்!

  • IndiaGlitz, [Thursday,February 11 2021]

அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ‘வலிமை’ படத்தின் எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் போனிகபூர் மற்றும் எச்.வினோத் ஆகியோர்களிடம் ‘வலிமை’ அப்டேட் குறித்து தொடர்ந்து கேட்டு வருகின்றனர் என்பதும் இருப்பினும் எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகின் முன்னணி ஊடகமான ‘போர்ப்ஸ்’ என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள போனிகபூர், ‘வலிமை’ படம் குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அஜித்தின் ‘வலிமை’ படத்தின் உள்நாட்டு படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் இன்னும் ஒரே ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டுமே வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் உறுதி செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் 15ம் தேதியுடன் உள்நாட்டில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் அதன் பின்னர் வெளிநாட்டு படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் ‘வலிமை’ அப்டேட் குறித்து போனிகபூர் கூறியுள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த தகவலை சமூக ஊடகங்களில் ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர்.