போனிகபூர் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: தனுஷ் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார் என்பதும் அந்தத் திரைப்படம் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்து என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் தற்போது அஜித் நடிக்கும் ’வலிமை’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் போனி கபூரை தினந்தோறும் வலியுறுத்தி வரும் நிலையில் திடீரென போனிகபூரின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஆனால் இது அஜித்தின் ‘வலிமை’ போஸ்டர் அல்ல, தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ’பொல்லாதவன்’ படத்தின் இந்தி ரீமேக் படமான ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ படத்தின் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போஸ்டரால் தனுஷ் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தாலும் அஜித் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீண்டும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் எப்போது? என்று போனிகபூரை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது