இந்த வருடம் 'தல' தீபாவளி தான்: போனிகபூர் வெளியிட்ட மாஸ் தகவல்!

அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியிட வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருப்பது அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. திட்டப்படி அனைத்தும் நடந்தால் இந்தப் படத்தை தீபாவளி அன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். ’ஏகே 61’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக போனிகபூர் கூறியதை அடுத்து இந்த ஆண்டு ’தல’ தீபாவளி தான் என அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

அஜித் ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இப்படி? செம ஹாட் பிகினி போட்டோஷூட்!

பள்ளி மாணவியாக அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகை ஒருவர் செம ஹாட்டாக பிகினி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் எடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

சிம்புவை திருமணம் செய்ய தயார், ஆனால்... பிரபல சீரியல் நடிகையின் பதிவு

நடிகர் சிம்புவுக்கு திருமணம் எப்போது நடக்கும்? யாருடன் நடக்கும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அவருடன் நடித்த நடிகை ஒருவர் சிம்புவை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக

'பக்கா கமர்ஷியல் படம்': கே.எஸ்.ரவிகுமார் பாராட்டிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் 'பக்கா கமர்ஷியல் படம்' என பாராட்டிய திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் 'கே.ஜி.எப் 2' படத்தை பார்க்க இவ்வளவு கட்டணமா? அதிர்ச்சியில் சந்தாதாரர்கள்!

 யாஷ் நடித்த  'கே.ஜி.எப் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது என்பதும் இந்த படம் 1100 கோடியை தாண்டி தற்போது திரையரங்குகளில் வசூல் செய்து கொண்டிருக்கிறது .

பிகினி உடையில் பிறந்த நாள் கொண்டாட்டம்: கேலி செய்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர்கான் மகள்!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் ஐராகான் சமீபத்தில் பிகினி உடையில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள்