close
Choose your channels

அஜித்தின் அறிமுகம் எனது மனைவியால் தான் கிடைத்தது: பிரபல தயாரிப்பாளர் 

Friday, February 21, 2020 • தமிழ் Comments

தனது மனைவி ஸ்ரீதேவியால் தான் தனக்கு அஜித்தின் அறிமுகம் கிடைத்தது என பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அஜீத் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவரும் ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டதாகவும், அந்த நட்பு இரு குடும்பங்களிடையேயான நட்பாக வளர்ந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தை தயாரித்த போனிகபூர் தற்போது அஜித் நடித்து வரும் ‘வலிமை' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போனிகபூர், ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது என்றும், இந்த படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட கமர்சியல் படமாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் இந்த படத்தில் அஜித்தின் ஆக்ஷன் காட்சிகளையும் சேஸிங் சாகசங்களையும் ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அஜித்துக்கும் என் மனைவிக்கும் நல்ல நட்பு இருந்தது என்றும் எனது மனைவியால் தான் அஜித்தின் அறிமுகம் தனக்கு கிடைத்ததாகவும் அஜித்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக படங்களை தயாரிக்க விருப்பம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் படம் தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தென்னிந்திய திரையுலகில் இனி அதிகம் என்னுடைய தயாரிப்பிலான படங்கள் வெளி வருவதை பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

Get Breaking News Alerts From IndiaGlitz