நாளை காலை 9.09க்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு: போனிகபூர் டுவீட்டால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் அவர்கள் தற்போது அஜித் நடித்து வரும் ’வலிமை’ உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நாளை காலை 9.09 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தியை அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் அந்த டுவிட்டை அவர் பவன் கல்யாண், நிவேதா தாமஸ், அஞ்சலி ஆகியோருக்கு டேக் செய்து உள்ளதால் இந்த அறிவிப்பு அஜிதின் ‘வலிமை’ படம் குறித்த தகவல் இல்லை என்பதால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பு போனிகபூர் தயாரித்து வரும் ‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படம் குறித்த அறிவிப்பு என்பதும் உறுதியாகியுள்ளது.

அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அஜித், சாரதா ஸ்ரீநாத் நடித்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. அமிதாப்பச்சன், அஜீத் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார் என்பதும் டாப்ஸி மற்றும் சாரதா ஸ்ரீநாத் நடித்த வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அஞ்சலி மூன்று பெண்களில் ஒருவராக நடிக்கிறார்.

இந்த நிலையில் நாளை காலை 9.09 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போனிகபூர் வெளியிடுவார் என்றும் அதில் பவன் கல்யாணுடன் நடிக்கும் 3 நடிகைகள் குறித்த தகவல்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மன அழுத்தம் இருக்கின்றதா? ரஜினி படம் பாருங்கள்: முன்னாள் கிரிக்கெட் வீரர்

கோலிவுட் திரையுலகில் கடந்த 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே

'பிகில்' நடிகையின் அடுத்த படத்தின் பூஜை: இந்துஜா, வர்ஷா பொம்மலா வாழ்த்து!

தளபதி விஜய், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'பிகில்' திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனை கேரக்டரில் நடித்தவர்களில் ஒருவர் நடிகை ரெபா மோனிகா

தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை- உடனே விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!!!

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகத்தின் வருவாய் குறைந்து காணப்படுகிறது. அதைத்தவிர சுகாதாரத் திட்டங்கள்,

ஜெயம் ரவியின் 'தமிழன் என்று சொல்லடா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில்

முதல்வர் வங்கிக் கணக்கில் கைவைத்த பலே திருடங்கள்!!! 5 பேர் கைது மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

அசாம் மாநிலத்தில் முதல்வர் நிவாரணநிதி வங்கிக் கணக்கில் இருந்து 3.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.