close
Choose your channels

உலகளாவிய அன்பு: தல அஜித் குறித்து போனிகபூரின் நெகிழ்ச்சியான டுவிட்!

Saturday, October 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தை தயாரித்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள், அந்த படத்தின் வெற்றிக்கு பின் அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்து உள்ளார் என்பதும், இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படம் அஜித்துக்கு மட்டுமின்றி போனிகபூருக்கும் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தையும் போனிகபூரே  தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ஏற்கனவே அஜீத் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள போனிகபூர் சற்று முன்னர் அவர் குறித்த நெகிழ்ச்சியான டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ’அஜித் அவர்களின் ஆர்வத்தையும் கனவையும் ஒருபோதும் யாராலும் தடுக்க முடியாது என்றும், அவருக்கு உலகளாவிய அன்பு கிடைத்துள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அஜித் தற்போது வட இந்தியாவுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். குறிப்பாக வாஹா எல்லையில் அஜித்தின் புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.