எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து!!!

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

 

உலகமே கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் எனக் காத்துக் கொண்டிருக்கும்போது ஒருநாட்டின் அதிபர் மட்டும் எனக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் எனக் கூறியதோடு, என் நாட்டிற்கும் அது தேவைப்படாது எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவு தற்போது உலகம் முழுவதும் கடும் வாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ. இவர் கொரோனா தொற்று உருவான காலக்கட்டத்தில் இருந்தே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார். அதாவது கொரோனா பாதிப்பு என்பது ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான். இதற்கு பயப்பட தேவையில்லை என்று செய்தியாளர்கள் மத்தியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து முகமூடி அணிந்தால் கொரோனா வராது எனக் கூறுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மக்களிடம் இருக்க வேண்டிய விழிப்புணர்வையும் தட்டி கழித்தார்.

அதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை, உலக நாடுகள் முழுக்க ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்து வந்தபோது பிரேசிலில் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்த மாட்டேன் என அடம்பிடித்து வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரியை பதவியை விட்டும் விலக்கினார். இப்படி அடுக்கடுக்கான சர்ச்சைகளில் ஈடுபட்டு வந்த அவர் பல பொதுக்கூட்டங்களில் மாஸ்க் இல்லாமலே கலந்து கொண்டார். இதன் காரணமாக கடந்த ஜுலை மாதத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அதையடுத்து அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தனிமைப் படுத்தப்பட்டார். ஆனாலும் தன்னுடைய அணுகுமுறையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்து மேம்போக்கான கருத்துகளையே அவர் கூறி வருகிறார். இதனால் சில அதிகாரிகள் அவருக்கு எதிரான விமர்சனங்களைக் கூறத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் “நான் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளமாட்டேன். அது என் உரிமை. பிரேசிலுக்கும் அது வேண்டாம்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் அந்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மற்றும் சமூக இடைவெளி குறித்த சில செயல் திட்டங்களையும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் பிரேசில் 2 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஒரு நாட்டின் அதிபரே இப்படி தன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் எனக் கூறுவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை பலரும் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

More News

நேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை!!!

பாகிஸ்தான் நாட்டில் திருநங்கை ஒருவர் கடுமையான உழைப்பினால் வழக்கறிஞரான பணியாற்றி வருகிறார்.

இரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்!!!

சுவீடன் நாட்டில் ஒரு தக்காளி பண்ணையின் உரிமையாளர் தன்னுடைய பண்ணையில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்.

பிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்தவர் ரமேஷ் தான் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக

கொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா??? பரபரப்பை கிளப்பும் விஞ்ஞானிகள்!!!

எந்த நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் உருவாகியது என்ற விவாதம் உலகம் முழுவதும் ஒரு மூன்றாம் உலகப் போரையே ஏற்படுத்தும் அளவிற்கு பெரும் சிக்கலாக நீடித்து வருகிறது.

கமல் சார் வச்சுருக்காரு சாட்டை: ஆரி சந்தோஷத்தை பார்த்தா, பாலாவுக்கு செம டோஸ் போல!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் சாட்டையை கையில் எடுத்து ஒரு சில போட்டியாளர்கள் மீது வீச வேண்டும் என ஏராளமான பார்வையாளர்கள் வேண்டுகோள், கோரிக்கை விடுத்த