தாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,May 24 2020]

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு கடந்த சில நாட்களாக மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் என 700க்கும் மேற்பட்டவர்களும், சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்படுத்தபட்டுள்ளதால் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் திருமணம் உள்ளிட்ட ஒரு சில விசேஷ நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து சேலத்தில் இன்று ஒரு திருமணம் நடந்தது. இன்று திருமணம் நடந்த மணப்பெண் ஒருவருக்கு தாலி கட்டிய சில நிமிடங்களில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டதாகவும், பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனையடுத்து இன்று திருமணமான பெண், தாலி கட்டிய ஒரு சில நிமிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். தாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மணமகன் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

More News

'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா? கோலிவுட்டில் பரபரப்பு 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த 'சந்திரமுகி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனை அடுத்து 15 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின்

இதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் பா ரஞ்சித். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்

தமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த கொரோனா விடுமுறையில் தமிழ் தெலுங்கு திரைப்படங்களின் பாடல்களுக்கு நடனமாடி அதுகுறித்த வீடியோக்களை

சிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகளுக்கு அவர்கள் வெளியே வந்தவுடன் வாய்ப்புகள் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது

மேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்! பரபரப்பு தகவல்

இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். இம்மாநிலத்தில் மட்டும் 47190 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.