8 வருஷமா மெனக்கெட்டு கட்டின பாலம் ஒரு மாதம்கூடத் தாங்கல… சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,July 16 2020]

பீகார் மாநிலத்தில் 8 வருஷமாக கட்டப்பட்ட பாலம் ஒன்று கடந்த மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. அந்தப் பாலத்தின் கட்டுமானத்திற்கு பீகார் மாநில அரசு ரூ. 263 கோடியை ஒதுக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பல ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த பாலத்தைக் கடந்த மாதம் ஜுன் 16 ஆம் தேதி மாநில முதல்வர் நிதிஷ்குமார் அவரது அலுவலகத்தில் உள்ள சம்வாத் அரங்கத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்திருக்கிறார். கந்தக் அற்றின் மேல் கட்டப்பட்ட இந்தப்பாலம் பல கிலோமீட்டர் கடந்து பயணிப்பதை தவிர்க்கும் வகையில் இருப்பதாகப் பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தனர்.

தற்போது அந்தப் பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடித்து விழுந்து ஆற்றில் சரிந்திருக்கிறது. இதுகுறித்த வீடியோவை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதனால் பீகார் மாநில அரசின் மீது எதிர்க்கட்சிகள் தற்போது கடுமையான குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். கந்தக் ஆற்றின்மேல் சட்டர்காட் பகுதியில் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் அமைந்திருக்கிறது. குறிப்பாக அம்மாநிலத்தின் சாம்பான் மாவட்டத்தில் உள்ள கேசரியா என்ற பகுதியில் பெரும்பாலான கட்டுமானங்கள் அமைந்து இருக்கின்றன. மேலும் சம்பாணை கோபால் கஞ்ச் என்ற பகுதியில் இருந்து பல ஊர்களுக்கு இந்த பாலத்தை இணைக்கும் வகையில் கட்டுமானம் அமைக்கப் பட்டு இருந்தது. இதனால் போக்குவரத்து வசதி துரிதமாக இருந்தது என மக்கள் மகிழ்ச்சித் தெரிவித்து இருந்த நிலையில் ஒரே மாதத்தில் பாலம் இடிந்து விழுந்து இருக்கிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து தற்போது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.