தண்டவாளத்தில் காரை ஓட்டிய இளைஞர்? பதிலுக்கு போலீஸ் கொடுத்த வெகுமதி!

  • IndiaGlitz, [Thursday,September 09 2021]

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காரை சாலையில் ஓட்டாமல் தண்டவாளத்தில் ஓட்டி அல்ட்ராசிட்டி காட்டியிருக்கிறார். இதனால் அந்த ஊர் நீதிமன்றம் இளைஞருக்கு 15 மாதம் சிறை தண்டனை மற்றும் 156 பவுண்டு அபராதம் விதித்து இருக்கிறது.

டட்டஸ்டன் நகரைச் சேர்ந்த இளைஞர் ஆரோன் ஓ ஹல்லோரன். இவர் தனது மிட்சுபிஷி காரை எடுத்துக்கொண்டு டட்டஸ்டன் நகர ரயில் நிலையத்திற்குள்ளே சென்றிருக்கிறார். ரயில் நிலையத்திற்குள் சென்றது மட்டுமல்லாது அங்குள்ள தண்டவாளத்தில் காரை இறக்கி திடீரென்று ஆஸ்டன் நகரை நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளார். இப்படி அரை கிமீ தூரம் வரை சென்ற ஆரோன் பின்னர் தண்டவாளத்தின் ஓரம் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்.

ஆரோன் செய்த இந்த செயலால் டட்டஸ்டன் நகரத்தில் இயங்கக்கூடிய அனைத்து ரயில்களும் தடைப்பட்டு இருக்கின்றன. கூடவே ஒட்டுமொத்த ரயில் நிலையச் செயல்பாடுகளிலும் குழப்பம் ஏற்பட்டு 8 மணிநேரம் அனைத்தும் தாமதம் அடைந்திருக்கின்றன. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ரயில்நிலைய அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆரோனுக்கு 15 மாதம் சிறை தண்டனை மற்றும் 156 பவுண்டு அபராதம் விதித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த பலரும் அர்த்தமில்லாத காரியத்தை செய்துவிட்டு ஏன் வினையை அனுபவிப்பானேன்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.